Monday, September 19, 2011

உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்!!!

சுஜாதாவின் 'கடவுள்' என்ற புத்தகம் எனது சமீபத்திய கண்டெடுப்பு. சென்ற வாரம் லேண்ட்மார்க் சென்றபோது தற்செயலாக கிடைத்தது. மூன்று புத்தகங்கள் இரண்டின் விலையில் என்ற திட்டத்தில் கிடைத்தது. ஆச்சரியமான பல தகவல்களோடு, நடுநிலையாக பல்வேறு மதங்களைப்பற்றியும், கடவுள் நம்பிக்கை, மறுபிறப்பு மற்றும் எதிர்காலம் அறியும் திறன் குறித்தும் ஆராயும் நூல். சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லை.

ஆனால், பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதிய சுஜாதா, கடவுள் இல்லை என்பது போன்ற தொனியில் நூலை முடித்திருக்கிறார். அது தான் கொஞ்சம் நெருடுகிறது.அவருக்குள் இருக்கும் பொறியாளர், அறிவியலாளரின் பங்கு அதிகம் போலும்!!!

'ஆணிலன் பெண்ணிலன் அலியுமிலன்' என்ற நம்மாழ்வாரின் வார்த்தைகளால் பிரம்மத்தை, இறையை, விவரிக்கிறார் ஆனால் கடவுள் என்று ஒன்று / ஒருவர் பிரபஞ்சத்தை இயக்கத்தேவையில்லை என்கிறார். எதை கொள்வது? ஏற்கனவே குழம்பிய குட்டை இது. இதில் அறிவியல் அறிந்தவர், ஆழ்வார்களைப்பற்றி எளிய அறிமுகம் தந்தவர், பிரம்மசூத்திரத்தை விளக்க முற்பட்டவர் குழப்பினால் என்னவாகும்? இன்னும் அதிகம் குழம்பியது!!!

கடைசியில் என் பழைய முடிவிலேயே தொடர்கிறேன் - உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்!!! அறிவியல் வந்து விளக்கும் வரை அல்லது இறை தன்னைகாட்டும் வரை உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்!!!

2 comments:

vellakaran said...

Aaahaa.. I am a sucker for that book.. even more for Sujatha.. but you cant say Sujatha is more biased as a man of science.. Pantheism enru onru undu..

vellakaran said...

I did a similar piece using Sujatha's reference..
but that confused a lot more, they say.. :P