Thursday, May 9, 2013

எது சரி?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்றொரு குறள் உண்டு. என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை எழுப்பிய, நான் கடைபிடிக்க முயற்சி செய்யும் குறள்களுள் இதுவும் ஒன்று; கடைபிடிப்பது மடத்தனமோ என்று குமுறும் குறளும் இதுதான்.

பல வருடங்களுக்கு முன், என்னுடன் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் பழகிய சிலர் செய்த பிழையை, குறள் கூறும் கருத்தின்படி மன்னிக்க முடிந்தது. மூன்று வருடங்களுக்குப்பின் மீண்டும் அதே தவறு தொடர்வது தெரிந்தபோது ஆயுதம் எடுப்பது தவிர வேறு வழிஇருக்கவில்லை! அந்தப் பிழையின் ஆழமும் வீரியமும் அதிகரித்திருந்தது; இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து என்ற குறள்தான் மனதுள் ஓடியது!!

அந்த முள்மரம் கீறிய வலி இன்னும் இரணமாக நிற்கிறது...

இந்த இரண்டு குறள்களுள் எது சரி? இன்று இத்தனை வலிக்குப் பின், முள்மரம் உவமை சரியாகப்படுகிறது. ஆனால், 2009 -ல் முதல் குறள் சரியாகத் தெரிந்தது... யார் சொல்லியிருக்கக் கூடும் எது சரியென்று?

No comments: