Saturday, October 10, 2015

சிந்தை தெளிவாக்கு!

இது பராசக்தியிடம் பாரதியின் கோரிக்கை! கவிதை உடல் சார்ந்து இருந்தாலும், மனம் சார்ந்த குழப்பங்களுக்கும் பொருந்தத்தான் செய்கிறது! மொத்தக் கவிதையின் அழகு இருப்பது இந்த இருசொற்களுக்குள்தான் என்று தோன்றுகிறது !

சிந்தை தெளிவாக்கு என்னும் இரட்டைப்பதத்துக்குள் எத்தனை வீரியம்! சிந்தை தெளிவாயில்லாமல் எதுவும் நகராது! வாழ்வின் ஆனந்தம் என்பது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் வாழ்வது! ஒன்று பிறழ்ந்தாலும் மனத்துள் கசப்பு கசியும்! அதே சமயம் பிறழ்ச்சியின்றி வாழ்தல் என்பது எளிதன்று! நீரில் மிதந்து செல்லும் இலை போல, காற்றில் பறக்கும் இறகுபோல, சிந்தையிருப்பின் இது கைவரக்கூடும்!


ஆனால், நதியிலோடும் இலையாய் இருப்பது எளிதா என்ன?நாற்றாகக்கூட இருக்க மனமில்லையெனில், மிதக்கும் இலையாக மாறுவது எப்படி? ஆழமான ஆணிவேர்களை உதிர்க்க இயலுமோ? இலை உதிர்த்த தாவரங்களுண்டு; வேர் உதிர்த்த தாவரங்களுண்டோ? வேரின்றி இலை உண்டோ? பற்றின்றி வாழ்தல் எளிதாமோ?

No comments: