Sunday, May 14, 2017

வண்ணமில்லா வண்ணம்!

பாரதியைப்போலவே நானும் வேண்டுகிறேன் மஹாசக்தியை! எங்கும் நிறைந்திருக்கும் இறையை! என் மஹா காளியை

எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம் 
    பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்!!

கருமை என்பது வண்ணமில்லை... வண்ணமில்லா நிலை... எண்ணங்கள் வண்ணமயமாயிருப்பின், எண்ணியவை எண்ணியவண்ணம் உருப்பெறச்செய்ய உயிர்கொண்டிருக்கும் காலத்தில் ஆடை வண்ணமில்லாவண்ணத்திலிருப்பதில் பிழையென்ன? எண்ணிய முடியும்வரை திண்ணியதாய் நெஞ்சம் இருக்கவேண்டுமாயின் ஒரு நினைவூட்டல் வேண்டியிருக்கிறது! வண்ணமறுநிலை நினைவூட்டுகிறது நான் செல்லவேண்டிய தூரத்தை! இது கடவுள் மறுப்புக்கொள்கையன்று!! சமூக மறுப்பன்று!! வலியென்றால் வலி!!! கோபமென்றால் கோபம்!!!! சீருடையென்றால் சீருடை! சங்கல்பமென்றால் சங்கல்பம்!! விரதமென்றால் விரதம்!!! 


செய்யவேண்டியவற்றைச் செய்யமறந்தமைக்காகவும், இனிமேல் மறக்காமலிருக்கவேண்டியும்!

No comments: