Friday, April 29, 2016

Dhakshayani…

It is interesting to reflect on why I chose Dhakshayani to be my sobriquet if at all I have one! 

I remember the day my parents took me to a movie called "Thiruvilaiyaadal" which literally means the games of God!  Though I did not understand many things, I remember I was upset that Shiva did not allow Sakthi to visit her own father. At a very tender age, only thing mattered in the whole movie to me was a girl not able to see her father; nothing else mattered! For the next few days, I was worried if someone will prevent me from seeing my dad!

I listened to the dialogues of the same movie many times in the temples during festival seasons. (Oh! They played only a few movies all the time!) I took it very personal! More and more I listened to it, the fear of not seeing my dad became an anger at a later point in time! I could not stand a thought of someone else having the power to stop me from meeting my dad!  Whether Dhakshan was right or wrong did not carry any weight in my mind. She may fight with him one day and the next day she may shower all her love on him; It is absolutely between the daughter and father I felt. It is none of Shiva's business to worry about what is happening between her and her dad, I firmly believed (believe still) .  

"Where did you come? How could you face me" were some of the lines that keep ringing in my ears even today. That made me even more furious. How can he be so rude to her for trying to defend him, claiming what is rightfully his? Final explanation that Shiva only tried to protect Sakthi from insults infuriated me further! So he can try to protect her from insults but she can't try to protect him from insults! To be able to protect is only a man's fort, is it? Moreover, who is he to stop her from entering the house? Is it not her house too? It was a strong feminist rage brewing in me during my teenage. Fortunately, the dialogue writer of the movie did not have a chance to meet me during that period! :-)

In early twenties, I was nick named as Kaali - the most ferocious form of Sakthi - as a result of a righteous anger  I expressed :-) . Around that time, I read that Sakthi did not like to be called as Dhakshayani and she took birth as daughter of Parvatharajan so that she will be called as Parvathi. I felt even more annoyed! I thought it was a story written by men to brainwash women to accept whatever the husband says; if she does not, her reputation is at stake; she will have to do a lot more to fix the "bad name".  I rejected the story as a mere lie! When all the Gods incarnated or manifested to protect someone or kill a monster or bless someone, Goddesses had other reasons too to incarnate in addition to killing a monster or blessing someone - to wipe out a bad name or a curse or do penance to be back with the God! These story lines irked me to the core. That is when I decided, I will retain my maiden name as my last name for ever! If world considers "Dhakshayani" as bad, uses it as a moral / emotional threat against women, that is the name I like the most. When I write this paragraph, after close to 20 years, I can still feel the smile with anger I held when I read the "Dhakshayani becoming Parvathi" story and felt close to "Dhakshayani"


Though, I mellowed down in several aspects as life progressed, my inclination towards "Dhakshayani" is intact!

Monday, April 25, 2016

To be or Not to be!!

Should we extend life with just medical support is one of the long debated, never ending, unanswerable questions! Though I have heard the question, arguments from both sides several times in the past, the question shook me today. When I heard the 40+ son feeling so desperate to save his 70+ mother, I did not know how to respond! The son is desperate for his mother and the mother is not in a position / state of conscious to decide!! When it  is just a discussion topic in office lunch table, our reaction is different! When it comes to reality, when someone is really going thru the pain of taking such a decision, our reaction is so very different! I did not have a suggestion one way or the other!

Of course, I can not decide for others! But, I have been thinking what is my decision in such a scenario! If I am in the mother's situation, my decision is not to extend my life only with medical support! No way!! I would rather go!

Many times, it appears as if there are things only I can do… But the truth is there is nothing that has to be done by a specific person only!! Sure, each of us is unique, precious, we are the only person who can do something the way we do! But we are not irreplaceable - be it in business world or in personal world! Even a child who loses both parents a minute after birth survives in this world! Of course, life becomes harder for the child; but it survives! So, why create unnecessary burden on the soul to stay longer  by force!


This blog post is like an open declaration to all that if at all I end up in such a situation, please donate all my "donatable" organs and let me go!

Wednesday, April 20, 2016

நீத்தேனில்லை…

ஆஹா! பற்றற்றவளாக என்னைப்  பாரோட்டியோருக்கு நன்றி. கேட்பதற்கு என்ன சுகமாக இருக்கிறது!

ஆனால், பற்றறுப்பது குறித்த யோசனையுடன் இருப்பவர்களெல்லாம் அறுத்தவர்களில்லை, முக்கியமாக அந்த நிலை நானடைய இன்னும் பல காலம் ஆகும் என்று  என் மறுப்பைப் பதிவு செய்யவே இந்தக்கட்டுரை

பற்றில்லாமலில்லை! அதேசமயம், பற்றறுநிலை மேல் பேராசையுடன் இருக்கிறேன்பேராசை என்று நான் சொல்ல பல காரணங்கள்! மாணிக்கவாசகர் போல, "வெற்று அடியேன்" என்ற பணிவு இல்லை! சரியாகச் சொல்லப்போனால் இருந்ததே இல்லை! விடுதிகண்டாய்; விடிலோ கெடுவேன் என்ற பதற்றம் இல்லை! அதற்கு பூனைகவ்விய குட்டியின் மனநிலை வேண்டும்! என் மனநிலை குரங்குக்குட்டி! நான்தான் பிடிக்கவும் விடவும் வேண்டும் என்பது என் மனோபாவம்! எனவே எதைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் குழப்பமாக எப்போதும் இருந்திருக்கிறது!

உற்றுத்தேறினேனில்லை! உற்றுப் பார்த்து அறிய முயல்கிறேன்! ஆனால், நான் உறவேண்டியதெல்லாம் உற்றேனா, அனுபவிக்க வேண்டிய இன்பதுன்பங்களை கடந்துவிட்டேனா என்று தெரியவில்லை! இன்னும் கடக்கவேண்டிய தூரம் எவளவு என்றும் தெரியவில்லை! கடந்த தூரத்தையும் அறிந்து கடந்தேனா என்றும் தெரியவில்லை! உற்றதையெல்லாம் உற்றுப்பார்த்தேனா என்றும் தெரியவில்லை!! உற்றுப் பார்த்து அறிய முயல்கிறேன். அவ்வளவுதான் !

மேலும், நடப்பது நாராயணன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்பவை என் கொள்கைகளில்லை. "செய்வன திருந்தச் செய்" பக்கம் நான்! அதற்காக பலனை எதிர்பாராத பெரிய கர்மயோகி என்று யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் :-) எதையும் செய்வதற்கு முன் ஏன் செய்யவேண்டும் என்று நூறாயிரம் கேள்விகள் என்னையா பிறரையோ கேட்காமல் செய்த நினைவில்லை! விளைவுகள் குறித்த சலனம் இல்லாமலில்லை! அவ்வளவு ஏன் ! அழுக்காவதற்காகவே, (அல்லது நம்மை அழுக்கிலிருந்து காப்பதற்காகவே) உள்ள காலணி அழுக்காவதைக்கூட நான் விரும்பியதில்லை! இந்த அழகில், நானாவது பற்றாவது அறுப்பதாவது! நல்ல கற்பனை உங்களுக்கு நண்பர்காள்! ஆனாலும் கேட்பதற்கென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது!

பற்றில்லாமல் இருக்கவேண்டும் என்று ஆசைப்படும் என்னைத்  துறவி போல நீங்கள் பேசுவது, லாட்டரி டிக்கெட் வாங்க ஆசைப்படுபவரெல்லாம் கோடீஸ்வரர் என்று சொல்வதற்குச் சமம்! உவமையை தயவுகூர்ந்து நன்றாகக் கவனிக்கவும்! உழைப்பவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! அது கட்டாயம் என்றேனும் நடக்கும்! லாட்டரி விழலாம் ஆனால் கட்டாயம் நடக்கும் என்று சொல்வதற்கில்லை! இது இன்னமும் ஒருபடி மேலே! இன்னமும் லாட்டரி டிக்கெட்டும் கூட வாங்கவில்லை! வாங்கலாம் என்று ஆசை அவ்வளவுதான்! வாங்கக் கடையுமில்லை பணமுமில்லை!! நிகழ்தகவு (Probability) கற்றோருக்குத் தெரியும், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் ஒன்றாக நடப்பதற்கான வாய்ப்பு  அவை தனியாக நடப்பதற்கான வாய்ப்பைவிடக் குறைவென்பது!

எனவே, நீத்தலை நினைக்கிறேன்அவ்வளவே!! ஆனால்  நீத்தேனில்லை!

Monday, April 18, 2016

அருளாய் சிவனே!

இன்னும் சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மாணிக்கவாசகரை வாசிப்பதில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்! இந்த பாடல் வரிகளைப் படித்தபின்தான் அப்படி ஒரு முடிவு!!

அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு
   ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்;
   போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க,
    என் செய்கேன்? `இது செய்க' என்றுஅருளாய்;
சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ்
    திருப்பெருந்துறை மேவிய சிவனே!

உடல் துண்டாக்கி அறுத்துக்கொள்ளப்போவதில்லை; தீயில் புகுந்து மாயவும் போவதில்லை; ஆனால்இந்த உடலை என்ன செய்வதென்று தெரியவில்லை, போக்கிடமும் அறியேன், இறக்கவும் இல்லை; இனிதாய் இருக்க என் செய்வேன் என்றும் தெரியவில்லை; இது செய் என்று அருளாயோ இறையே என்று கேட்கும்வண்ணம் அவரைத் தூண்டியது எது? இறைபக்தியால்மட்டுமே ஒருவர் இப்படிக் கேட்கக்கூடுமோ? பல்வேறு பாதைகளில் ஒன்றை தேர்ந்தேடுக்கவேண்டியிருந்தாலோ அல்லது பாதையே தெரியாமல் இருந்தாலோ இப்படித்தோன்றும்! குறிப்பாக பாதைதெரியாமலிருந்தால் இப்படித்தான் தோன்றும்! பக்தி மிகுதியால் இத்தகு உணர்வு வருமேன்பதே ஆச்சர்யமாக இருக்கிறது!

பொதுவாக நம் மனநிலையை ஒத்த கவிதைகளை, கதைகளைப் படித்தாலோ பாடல்களைக் கேட்டாலோ உலகம் இனிதாய்த் தோன்றும்; நம்மைப் போல பிறரும் நினைப்பதுவும், நெகிழ்வதுவும் மகிழ்வைத்தரும். ஆனால், அடுத்தது என்ன என்ற கேள்வியோடு இருக்கும் நேரம், இந்தப் பாடல் படித்தால், யாரவது வந்து அருளாமல் என்செய்வதென்று தெரியாதோ என்ற பயம் உள்ளோடுகின்றது!


இனிதிருக்க இனி என் செய்கேன்இது செய்கஎன்றுஅருளாய் சிவனே!

Friday, April 15, 2016

நீத்தல் விண்ணப்பம்

திருவாசகத்தின் ஒரு பகுதி நீத்தல் விண்ணப்பம்! ஐம்பது பாடல்கள்! வாசிக்கும்பொழுதே ஒரு வருத்தம் பரவுகிறது. வருத்தம் என்றால் சாதாரண சோகமில்லை! ஒரு சொல்லத்தெரியாத உணர்வு, வலி பரவுகின்றது!

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய். விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே

ஐம்பது பாடல் இருந்த போதிலும், இந்த பாடல் தாண்டி வாசிக்க இயலவில்லை! எதை நீக்க விண்ணப்பம்? பெற்றதுகொண்டு பெருக்கும் பிழை நீக்கவா? அன்பைச்சுருக்கும் குறை நீக்கவா? தாங்குநர் இல்லாமையால், உடலினின்று உயிர் நீக்கவா? உற்றுத்தேறினாலும் - உலகின் போக்கு உணர்ந்து தேறினாலும்- விடமுடியா பற்று நீக்கவா? எல்லாமுமா?

இவை நீக்குதல் அத்தனை எளிதா என்ன? "பெற்றதுகொண்டு" என்பதற்கு "உடலால்" என்று உரை எழுதப்படுகிறது. உடல் மட்டுமா பெற்றது? எல்லா பேறுகளும் பெற்றவை தானே? அதானால்தானே அவற்றுக்கு பேறு என்று பெயர்! பதினாறுவகை பேறுகளும் அதனால் நாம் செய்யும் பிழைகளும் இதில் அடக்கம் என்று தோன்றுகிறது! எத்தனை விதமான கர்வம்! எத்தனை விதமான பிழைகள்! ஒன்று குறைக்க இன்னொன்று துளிர்க்கிறதே!!

அன்பை விரித்தல் என்பதும் எளிதில்லை! தூய அன்பாய் விரிந்தாலும், நாடகம் என உலகம் எள்ளும்தொழுத கையுள் படை ஒடுங்கியிருக்கிறதோ என்றஞ்சும்! வாளோங்கும்! அன்பை தூய்மையானதாய் மட்டுமே விரித்தலும், பின்னர் வாளோங்கினாலும், எள்ளினாலும் தயங்காமல் தொடர்ந்து விரிதலும் எளிதில்லை!

தாங்குநர் இல்லா நிலை குறித்து மாணிக்கவாசகர் ஏன் நினைக்கவேண்டும்? அமைச்சர், செல்வந்தர் பிரபலர், நெருங்கியோர்க்கும் நெருங்காதோர்க்கும் அன்பர். இத்தனைக்குப் பிறகும், தாங்குநர் இல்லையா? ஒருவேளை முதுமையில் தாங்குவதைப்பற்றி அவர் சொல்லவில்லையோ? என்பிழைகளைத் தாங்குநர் இல்லை என்கிறாரோ? என் செயல்களை பூதக்கண்ணாடிகொண்டு ஆராய்ந்து, குறைகாணாமல், நான் அவர்கள்போலவே இல்லை என்று பழிக்காமல், என்னை நானாக ஏற்றுக் கொள்வோரில்லை, தாங்குநர் இல்லை என்கிறாரோஅப்படிப்பட்ட சூழல் யாருக்குத்தான் இருக்கிறது? யாருக்குத்தான் நாம் கொடுக்கிறோம்? கொடுப்பதுதானே திரும்ப வரும்?

மாணிக்கவாசகராவது உற்றுத்தேறிவிட்டார், அதன்பின் பற்றறுக்கத் துணைதேடுகின்றார்! என்போல் உற்றுத்தேறாதோர் கதி என்ன? விருந்துண்டபின் வரும் நிறைவு போல நிறைவான வாழ்வின்பின் பற்று நீங்கும் என நினைத்ததுண்டு! விருந்துக்குப்பின் மட்டுமல்ல, ஒவ்வாமையாலும்கூட பற்று நீங்குமோ என்றும் நினைத்ததுண்டு! இரண்டும் பிழையான கருத்துக்கள்; உயிர்வாழமட்டுமே உணவு என்று மனத்தால் தள்ளிநின்றால் மட்டுமே அறுக்க ஏலுமோ என்றும் நினைத்ததுண்டு! நினைத்தல் எத்தனை எளிது!! நினைப்பவற்றைத் தெளிவாய்ச் சொல்வது கடினம்! அதைவிடக் கடினம் சொல்லியவண்ணம், எண்ணியவண்ணம் செயல்!


ஆகவே, நீத்தலை விண்ணப்பிக்கமட்டும்தான் முடியுமோ? முயன்று அடைதல் கூடாதோ? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தருமன்றோ? திருக்குறள் பொதுமறை இல்லையோ?