Tuesday, December 24, 2013

கல்லான அகலிகை!

ஏன் யாரோ செய்த தவற்றிற்காக கல்லாக மாற சபிக்கப்பட்டாள் என்ற கேள்வியும் இந்தக்கதை என்ன சொல்ல விழைகிறது என்ற தேடலும் ராமாயணத்தை நினைக்கும்போதெல்லாம் எழாமலிருப்பதில்லை!

பெண்கள் மீதான அடக்குமுறைக்கான ஏற்பாடு மட்டும்தானா இந்தக்கதை? ராமாயணம் மனைவியரின்மேல் ஆணுக்குள்ள உரிமையை, ஆளுமையை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இந்தக்கதை அதையும் மீறிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.


 மிகவும் நம்பப்பட்ட ஒருவரால், அல்லது ஒரு விஷயத்தில் ஏமாற்றப்படும்போது மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஒன்று முறிந்துபோகிறது; வாழ்வின் இனியவிஷயங்களை ரசிப்பது - ரசிப்பது என்ன - உணர்வது கூட இயலாமல் போகிறது. வழக்கமாக பாடலொன்றை முணுமுணுத்துக்கொண்டு ரசனையுடன் செய்யப்படும் வேலைகள் கூட, செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகிப்போகிறது! கைகளும் கால்களும் இயந்திரம் போல வேலை பார்க்க மனமோ வேறெங்கோ சஞ்சரிக்கும் நிலை ஏற்படுகிறது. எனக்கென்னவோ கல்லாதல் என்பது இதுதான் என்றே தோன்றுகிறது. அகலிகை இந்திரனால் கல்லானாளா அல்லது தன்னை நம்பமுடியாத கௌதமரைத் தான் நம்பிய வேதனையால் கல்லானாளா என்பது அவள் மட்டுமே அறிந்திருப்பாள்! வாழ்வின் அனைத்து தளங்களிலும் கல்லாயிருந்தாளா அல்லது கௌதமருக்கு மட்டும் கல்லாயிருந்தாளா என்பதும் அவள் மட்டுமே அறிந்திருப்பாள்!


 நிகழ்காலத்தில் வாழமுடியாமல் கடந்த காலத்தின் சுமையால் உணர்வைத் தொலைத்த அனைவரும் கல்லாய்ப்போனவர்களே! நேற்று நம்மில் விட்டுச்சென்ற குப்பையை, ஏமாற்றப்பட்ட வலியை, நியாயமான கோபத்தின் காரணமாக நமக்கு நாமே இட்டுக்கொண்ட விலங்கைக்  களையும் வலிமை, ஏதோ ஒரு அற்புததருணத்தில் நமக்குக்கிடைக்கிறது. பிறர் வலியை உணரும்போதோ, நல்லாசிரியர் வழிகாட்டுதலின்பேரிலோ கல் உடைந்து, மறைந்திருந்த மனிதம் வெளிவருகிறது. அகலிகைக்கும் அதுதான் நிகழ்ந்திருக்கக்கூடும். தன் வலியை விட ராமனின் வலி அதிகமாகத் தெரிந்திருக்கலாம்! அல்லது ராமன் தன்  வலியை மறப்பதற்கு உபயோகித்த உத்திகளைக் கற்றுக்கொடுத்திருக்கலாம்! தாய்க்குச்சமமாகக் கருதிய கைகேயியால் ராமன் ஏமாற்றப்படுவான் என்று அவள் உணர்ந்திருக்கலாம்! அல்லது ராமன் சீதையை நம்பாமல் விளைவிக்கவிருக்கும் துயரைவிட கௌதமர் தன்னை நம்பாமல் போன வலி குறைவாய்த்தெரிந்திருக்கலாம்!


நம்மைச் சுற்றி எத்தனை அகலிகைகள்!
 நம்முள் எத்தனை அகலிகைகள்!
 கல்லுடைக்க ராமன் வரும் நாள் எந்நாளோ!

Sunday, December 15, 2013

Right to express

I travel every day by taxi. I generally use my travel time to catch up with my friends and family, so do not interact with the drivers mostly. But today is one of those rare days that the driver started conversing with me; I too did not have the will to talk to anyone from my usual list, so started listening to this person. He  spoke about how he ate his breakfast in a government run restaurant, how he dropped a person in a neighboring state and made considerable money unlike the other days and so on & so forth.

After 15 - 20 mins of conversation, rather, talking about various disconnected items (the only connection was they were all the driver's experiences with something), he abruptly stopped and said, "Madam, thank you". I could not understand why he is thanking me, because I have not said anything other than acknowledging him with a few "uh-hm", "I see"! After pausing and leaving me in complete silence for a few minutes, he said, "after 10 days, I talked to someone about something other than my work and you listened intensely. Thank you for that". 

I was curious to know why is he saying so. Without me prompting further he explained how he is always on the move, how his wife and sons are managing his absence, how his customers are requesting for his services, how he responds to them, how customers distance themselves from him, how his family is keen only on the money he brings in (surprisingly, he did not blame them; instead he said it is natural for anyone who is hard pressed for money!) and how he does not have a chance to talk to anyone on most of the days. When I met him, he was away from his family also for more than a week. So literally, he had not talked to any one about anything other than pickup place, drop place, bill and cash! While he accepted the realities of life with a chuckle, he was longing inside to share with 'someone'! By the time he was done explaining his reasons for thanking me for listening to him, we had reached my house. I got off the cab thanking him for the service, giving money. He thanked me multiple times for the conversation before letting me leave. 

Since then, I have been thinking deeply about this experience and about my cook - who generally has a lot of stories to share. Unfortunately, when she is at my kitchen fixing our breakfast and lunch, I am busy doing my yoga, meditation and getting ready to go to work. I did not have the time to talk to her about anything else other than deciding the next day's menu and giving feedback on that day's food (that too only because she asks for!). I listened to her only to agree/disagree and how to reply not to understand her as a person not even to give her the feeling of being heard. Wow.... that hit me hard!!! Till then, I was thinking that I am treating her like myself by letting her choose to eat whatever & whenever she feels like and drink coffee/tea/milk any number of times she likes… Now I am thinking, really? Of course in many houses, the maids do not get to choose what do they eat, when do they eat etc.. But it does not mean that I am treating her like how I would like to be treated myself. Dont I want someone to listen to me to understand instead of listening only to reply!! 


Don’t you think all of us need someone to listen to our stories and don’t you think that we all have the right to express! Do we really give this to those around us and do we really have it ourselves? Is it not the minimum respect our fellow human beings deserve to get from us? If right to express is one of the foundational human rights, is active listening not one of the fundamental duties?

Wednesday, December 4, 2013

சுத்தபடுத்த வழி என்ன?

பஞ்ச பூதங்களும் பல  பொருட்களைச்சுத்தம் செய்ய உதவுகின்றன! தூசி நீக்க காற்று உதவும்! துணியின் அழுக்கு நீக்க நீர் உதவும்! விளக்கின் அழுக்கு நீக்க மண் உதவும்! தங்கத்தின் அழுக்கு நீக்க தீ உதவும்!

மனதின் அழுக்கை நீக்க வழி என்ன? ஆகாயமா?